/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுமுறையால் ஏ.டி.எம்.,களில் பணம் இன்றி மக்கள் தவிப்பு
/
விடுமுறையால் ஏ.டி.எம்.,களில் பணம் இன்றி மக்கள் தவிப்பு
விடுமுறையால் ஏ.டி.எம்.,களில் பணம் இன்றி மக்கள் தவிப்பு
விடுமுறையால் ஏ.டி.எம்.,களில் பணம் இன்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜன 18, 2024 05:46 AM
திருவாடானை: பொங்கல் தொடர் விடுமுறையால் வங்கி ஏ.டி.எம்.,. கள் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களாக தொடர் விடுமுறையானது. இதனால் திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம்., களில் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் பணம் எடுத்ததால் பெரும்பாலான மையங்களில் பணம் காலியானது.
இதனால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி செலவு செய்தனர். திருவாடானை ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் பணம் இல்லை. தொடர் விடுமுறை காலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் கூடுதலாக பணம் வைக்க வங்கிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.