/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை மருத்துவமனை திறக்க மக்கள் வலியுறுத்தல்
/
கால்நடை மருத்துவமனை திறக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: -கீழக்கரை அரசு கால்நடை மருத்துவமனை புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீழக்கரை கால்நடை அரசு மருத்துவமனை கடந்த 1975ல் கட்டப்பட்டது. அதன் அருகே கால்நடை பரிசோதனை கூடம் உள்ளது.
கால்நடை மருத்துவமனை அருகே கூடுதல் வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.40 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
எனவே சுற்றுவட்டார விவசாயிகளின் நலன் கருதி கால்நடை மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

