/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராதானுாரில் சுகாதாரநிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
ராதானுாரில் சுகாதாரநிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ராதானுாரில் சுகாதாரநிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ராதானுாரில் சுகாதாரநிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 04:47 AM
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேடாகோட்டை அருகே ராதானுார் கிராமத்தில் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ராதானுார் ஊராட்சியில் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த சுகாதாரநிலையம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாகியும் மீண்டும் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்கவில்லை. இதனால் 6 கி.மீ.,ல் உள்ள ஆனந்துார் அரசு மருத்துவமனைக்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே ராதானுாரில் துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.