/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரத்தடியில் காத்திருந்து பயணிக்கும் மக்கள்
/
மரத்தடியில் காத்திருந்து பயணிக்கும் மக்கள்
ADDED : மார் 30, 2025 04:36 AM

முதுகுளத்துார் : முதுகுளததுார் அருகே மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மரத்தடி நிழலில் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது.
முதுகுளத்துார் சிக்கல் ரோடு மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.
அதன் பின் தற்போது வரை புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் மழை, வெயில் நேரத்தில் மரத்தடி நிழலில் ஆபத்தான நிலையில் காத்திருந்து செல்கின்றனர். மரத்தடியில் உள்ள இருக்கையும் சேதமடைந்துள்ளது.
எனவே மக்களின் நலன் கருதி புதிய பயணியர் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.