/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமாதானக் கூட்டத்தில் மக்கள் வெளிநடப்பு
/
சமாதானக் கூட்டத்தில் மக்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 22, 2024 11:14 PM
கமுதி : கமுதி தாலுகா அலுவலகத்தில் சாலை அமைப்பது சம்பந்தமாக நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இருந்து அகத்தாரிருப்பு கிராம மக்கள் வெளி நடப்பு செய்தனர்.
கமுதி அருகே பாப்பனம்கிராமத்தில் இருந்து அகத்தாரிருப்பு கிராமம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்க பாப்பனம் கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது அகத்தாரிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கமுதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேதுராமன் தலைமையில் அகத்தாரிருப்பு, பாப்பனம் கிராம மக்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடந்தது.
இதில் இரு தரப்பு கருத்துகளையும் கேட்ட பின்பு பாப்பனம் முதல் அகத்தாரிருப்பு வரை சாலை அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய பொறியாளர் திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து ஊராட்சி தலைவர் மூலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்என்று தாசில்தார் சேதுராமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் முடிவை ஏற்க மறுத்து அகத்தாரிருப்பு கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர். உடன் மண்டல துணை தாசில்தார் வேலவன், அபிராமம் போலீஸ் அதிகாரிகள், ஊரக வளர்ச்சி அதிகாரிகள் இருந்தனர்.