/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல் முறையாக வந்த அரசு பஸ் ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
/
முதல் முறையாக வந்த அரசு பஸ் ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
முதல் முறையாக வந்த அரசு பஸ் ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
முதல் முறையாக வந்த அரசு பஸ் ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
ADDED : மே 20, 2025 12:45 AM
கமுதி: கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து, தற்போது முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை கிராமமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு பல தலைமுறையாகவே பஸ் வசதியின்றி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்துத்துறை அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று முதல் முறையாக கமுதியில் இருந்து வண்ணாங்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
இதையடுத்து முதல் முறையாக கிராமத்திற்குள் வந்த அரசு பஸ்ஸை கிராம மக்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்பு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.