/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்திய மக்கள்
/
சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்திய மக்கள்
ADDED : அக் 18, 2025 03:41 AM

திருவாடானை: திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டை கிராம மக்கள் சொந்த செலவில் 5 இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக் களை அமைத்தனர். திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டை கிராமத்தில் குற்ற சம் பவங்களை தடுக்கும் வகையில் கிராம மக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊர்க்கூட்டம் நடத்தி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது என்றும், குற்றச் செயல்கள் நடந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிப்பது என முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சிறு மலைக்கோட்டை ஊராட்சி அலுவலகம், கீழக்குடி யிருப்பு, காசாலை குட்டை, கிருஷ்ணர் கோயில், கிராம சேவை கட்டடம் ஆகிய 5 இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இக்கேமராக்களின் செயல்பாட்டை திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், கிராமங்களில் குற்றச் சம்பவங்கள் நடை பெற்றால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்காற்றி வருகிறது.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராம மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டு கண் காணிப்பு கேமரா வைத்துள்ளனர்.
இதே போல் மற்ற கிராமத்தினரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ்பெக்டர் மருது பாண்டியன், தனிப்பிரிவு ஏட்டு துரை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.