/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
/
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : ஜன 22, 2025 07:50 AM

ராமநாதபுரம் : -உதவித்தொகையை அதிகரித்து வழங்கக் கோரி ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுட்ட 15 பெண்கள் உட்பட 49 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்திற்கு தாலுகா தலைவர் நடராஜன் தலைமை விகித்தார். தாலுகா பொருளாளர் நிலர்வேணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்டத்தலைவர் கல்யாணசுந்தரம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6000, தவழும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.10 ஆயிரம், படுக்கையில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.
நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 4 மணி நேரம் இலகுவான வேலையும், முழு சம்பளமும் வழங்கக் கோரி கண்டன கோஷங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 பெண்கள் உட்பட 49 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவித்தனர்.
---------*முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் முனியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம், கமுதி தாலுகா அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது.