/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்; 4 கைதிகள் விடுதலை
/
ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்; 4 கைதிகள் விடுதலை
ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்; 4 கைதிகள் விடுதலை
ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்; 4 கைதிகள் விடுதலை
UPDATED : ஆக 27, 2023 06:50 AM
ADDED : ஆக 27, 2023 05:42 AM

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் சிறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 4 குற்ற வழக்குகளில் சிறையில் இருந்தவர்களை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார்.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு பொறுப்பு தலைவர் கோபிநாத் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சிறைச்சாலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் விசாரணை நீதிபதியாக ஜி.பிரபாகரன் இருந்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சி.கதிரவன் ஏற்பாடுகளை செய்திருந்தார். 14 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
இதில் நான்கு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வாலாந்தரவை பிரகாஷ், மானாமதுரை மகாலிங்கம், தொண்டி தென்ராஜ், பரமக்குடி லோகேஷ் ஆகியோர் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி 4 பேரையும் நீதிபதி பிரபாகரன் விடுவித்து உத்தரவிட்டார்.
மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தவமணி, சட்ட உதவிக்குழு வழக்கறிஞர்கள் ஜி.கேசவன், ஜி.விஜய் ஆனந்த், டி.பாலகுமார் பங்கேற்றனர்.