/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் -- கோவை தினசரி ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
ராமேஸ்வரம் -- கோவை தினசரி ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ராமேஸ்வரம் -- கோவை தினசரி ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ராமேஸ்வரம் -- கோவை தினசரி ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 31, 2025 01:42 AM

ராமேஸ்வரம்:  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - கோவை இடையே தினசரி ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைத்த பின் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ரயில்கள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றன. 2007ல் ராமேஸ்வரம் டூ மதுரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட போது ராமேஸ்வரம்- கோவை இடையே இயக்கப்பட்ட தினசரி ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. 18 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம்- கோவை ரயில் போக்குவரத்தை இன்று வரை துவக்கவில்லை.
இதுகுறித்து இந்திய நுகர்வோர் சம்மேளன பொதுச்செயலாளர் என்.ஜெயகாந்தன் கூறியதாவது: கோவை மாவட்ட எல்லைப் பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் சிகிச்சைக்காக மதுரை வரவும், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களை தரிசிக்கவும் ராமேஸ்வரம்- கோவை ரயில் போக்குவரத்து பேருதவியாக இருந்தது. இந்த ரயில் நிறுத்தப்பட்டு 18 ஆண்டுகள் ஆனதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரயில் மூலம் கோவை, சேலம், ஈரோடு பகுதிக்கு வியாபாரிகள், மாணவர்கள் எளிதில் செல்ல முடியும். எனவே ராமேஸ்வரம்-கோவை ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

