/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் மக்கள் எதிர்பார்ப்பு
/
புதிய பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 18, 2025 11:31 PM

முதுகுளத்துார்::
முதுகுளத்துார் பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பணிகள் முடிவடையாத நிலையில் மூன்று மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அவ்வப்போது மேம்பாலம் பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவசர நேரங்களில் எதிரே வரும் மாணவர்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களில் சிரமப்பட்டு வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2023--24ம் ஆண்டு ரூ.3.85 கோடியில் வரத்து கால்வாயை கடந்து செல்ல ஒரு வழி பாதையாக மாற்றுவதற்காக புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு மேலாக எந்த பணியும் நடைபெறாமல் புதிய மேம்பாலம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
இதனால் பாலம் கட்டப்பட்டும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் பணிகளை முழுவதுமாக முடித்து விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.