/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் எதிர்பார்ப்பு: ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் மக்கள் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்
/
மக்கள் எதிர்பார்ப்பு: ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் மக்கள் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்
மக்கள் எதிர்பார்ப்பு: ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் மக்கள் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்
மக்கள் எதிர்பார்ப்பு: ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் மக்கள் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்
ADDED : ஜன 17, 2025 05:15 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லாணி, கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி, போகலுார், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 429 ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜன.5 முதல் ஐந்து ஆண்டு காலம் ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததால் சம்பந்தப்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர். மண்டல துணை பி.டி.ஓ., ஊராட்சி செயலர் மற்றும் பி.டி.ஓ., ஆகியோரின் பங்களிப்பில் ஊராட்சி நிர்வாகம் நடக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
ஊராட்சி அலுவலகங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பிரச்னைகளான குடிநீர், ரோடு வசதி, தெருவிளக்குகள், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் செய்வதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் பதவி நிறைவு பெற்ற ஊராட்சி தலைவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து உள்ளது. பதவி நிறைவு பெற்ற பின் அவரும் மற்றவர்களைப் போல பொதுமக்களில் ஒருவர் தான். ஆனால் முன்னாள் ஊராட்சி தலைவர் என்ற போர்வையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை கண்டறிந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் தேவையில்லாத இடங்களில் தடுப்பணைகள், உறிஞ்சிகுழி அமைத்தல், தானியங்கள் காய வைப்பதற்கான களம் அமைத்தல் உள்ளிட்டவைகளை பல லட்சங்கள் செலவு செய்து அரசு நிதியை வீணடிப்பு செய்துள்ளனர்.
பெரும்பாலான அரசின் நலத்திட்டங்கள் பயன்பாடில்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்தும் வகையில் தனி அலுவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றனர்.