/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு
/
அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 26, 2024 05:03 AM

ராமநாதபுரம்: அபிராமம் பேரூராட்சியுடன் அண்ணா நகர் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
அபிராமம் பேருராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக அதன் அருகில் உள்ள கிராமங்களை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நத்தம் ஊராட்சிஅண்ணாநகர் கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை செய்கின்றனர்.பலர் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி புரிகின்றனர்.
பேரூராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை கிடைக்காது. எனவே அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அண்ணாநகர் கிராமத்தை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.