ADDED : ஆக 25, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே தமிழ்நாடு மக்கள் இயக்கம் மாவட்டக்குழுக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், கல்வி வணிகமயத்தையும், நீட் உள்ளிட்ட தேர்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ராஜன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம், விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, இன்ஸ்சூரன்ஸ் ஊழியர்களும் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
––
