/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்
/
பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்
பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்
பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்
ADDED : செப் 30, 2024 04:36 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் ரூ.7 லட்சத்திற்கு ஏலம்விடப்பட்டுள்ள மீன்களை பிடிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக, குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.
மழையின்றி வறட்சியின் காரணமாக, கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் விரைவாக காலியாகி தாழ்வான பள்ளங்களில் மட்டுமே தேங்கி இருந்தன.
கடந்த ஆண்டு வைகை ஆற்றில் இருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டதால், கண்மாயில் ஏராளமான மீன்கள் வளர்ச்சி அடைந்திருந்தன. பாசன விவசாயிகள் சார்பில், தாலுகா அலுவலகத்தில் மீன்கள் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து கண்மாயில் தாழ்வான பகுதிகளில் இருந்த தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு, மீன்களை தொழிலாளர்கள் பிடிக்கும் பணி நடக்கிறது.
பெரிய கண்மாயில் உள்ள மீன்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.