/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயில் அருகே தொடர் மணல் திருட்டு போலீசார் ரோந்து தேவை

ADDED : அக் 16, 2024 05:38 AM
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயில் அருகே மணல் திருட்டு தொடர்ந்து நடப்பதால் போலீசார் ரோந்து சென்று தடுக்க வேண்டம்.
இங்குள்ள அழகு நாயகி அம்மன் கோயில் மற்றும் முன்புறம் உள்ள ஊருணி 5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. இங்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும், இரவு நேரங்களிலும் சட்டவிரோதமாக கோயில் ஊருணியை சுற்றி உள்ள பகுதியில் மணற்பங்கான பகுதியை தேர்வு செய்து சாக்குகளில் குழி பறித்து மண் அள்ளும் போக்கு தொடர்கிறது.
ஊருணியை சுற்றிலும் அதிக பள்ளங்கள் உருவாகி வருவதால் கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் முத்துக்கருப்பன், குப்புசாமி, பாண்டி கூறியதாவது: பொதுமக்கள், பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ள மணற்பாங்கான பரப்பை கொண்ட அழகு நாயகி அம்மன் கோயில் ஊருணியை சுற்றிலும் தொடர்ந்து சட்ட விரோதமாக மண் அள்ளி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். சிமென்ட் சாக்குகளை கொண்டு சரக்கு வாகனங்களில் மண் எடுக்கும் போக்கு தொடர்கிறது. இது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் இரவு ரோந்து வர வேண்டும் என்றனர்.
பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கோயில் ஊருணி அருகே அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.