/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி
ADDED : மே 18, 2025 04:40 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பராமரிப்பு பணிகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க தற்போது ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவமனை வளாகங்களில் துாய்மை பணி, நோயாளிகளுக்கு உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பணியாளர்கள் 500 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 200 பேர் மட்டுமே பணிபுரிந்து வந்தனர்.
இதன் காரணமாக பராமரிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந் நிலையில் பராமரிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் கிறிஸ்டல் மாற்றப்பட்டு தற்போது ஸ்மித் என்ற நிறுவனம் பொறுப்பு ஏற்றுள்ளது. பற்றாக்குறையை தவிர்க்க பணியாளர்களை நியமிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக 200 பேர் பணி செய்த ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேலும் 250 புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் காலங்களில் பாரமரிப்பு பணிகள் தொய்வின்றி நடக்க வாய்ப்பு உள்ளது.