/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி கோயிலில் குதிரை வாகனத்தில் அம்பு எய்த பெருமாள்
/
திருப்புல்லாணி கோயிலில் குதிரை வாகனத்தில் அம்பு எய்த பெருமாள்
திருப்புல்லாணி கோயிலில் குதிரை வாகனத்தில் அம்பு எய்த பெருமாள்
திருப்புல்லாணி கோயிலில் குதிரை வாகனத்தில் அம்பு எய்த பெருமாள்
ADDED : அக் 13, 2024 04:24 AM

திருப்புல்லாணி: நவராத்திரி உற்ஸவ விழாவை திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பத்தாவது நாள் நிறைவாக நேற்று விஜயதசமியை முன்னிட்டு கல்யாண ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் உற்ஸவ மூர்த்தியாய் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு கோயில் வளாகத்தில் குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.
பின்னர் வடகிழக்கு மூலையில் நிலை நிறுத்தப்பட்டு அங்குள்ள வன்னி மரத்தடி அருகே சிறப்பு தீபாராதனை உற்ஸவ மூர்த்திக்கு காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வன்னிமரக் கூடுகளின் அருகே கோயில் ஸ்தானிக அர்ச்சகரால் பெருமாள் வில்லில் இருந்து அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.
நாலாபுறமும் அம்பு எய்த பின் கல்யாண ஜெகநாத பெருமாள் இருப்பிடம் வந்தடைந்தார்.
* சாயல்குடி அருகே திருமால் உகந்தான் கோட்டையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட செஞ்சடைநாதர் கருண கடாச்சி அம்மன் கோயில் உள்ளது. விஜயதசமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
சுவாமி, அம்பாள் நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடாகி ரிஷப வாகனத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு திடலில் வில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.
பூஜைகளை கோயில் ஸ்தானிகர் நாகநாத குருக்கள் செய்திருந்தார்.
வில், அம்பு எய்யும் நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விடப்பட்ட அம்பை எடுப்பதற்காக ஏராளமானோர் போட்டி போட்டு ஆர்வமுடன் எடுத்தனர்.