/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருவயல் கண்மாயில் நிர்வாகிகள் கள ஆய்வு
/
பெருவயல் கண்மாயில் நிர்வாகிகள் கள ஆய்வு
ADDED : ஏப் 11, 2025 04:43 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் கண்மாய் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கிறது.
இந்நிலையில், இந்த கண்மாய் பாசன மடைகள் மற்றும் வரத்து கால்வாய்களின் தற்போதைய நிலை குறித்து காவிரி, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கண்மாய்க்கு வைகை நீர் வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, மற்றும் வெளிப்போக்கு மதகு விரிசல் உள்ளிட்டவைகளை சரி செய்ய கூட்டமைப்பு நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமநாதன் உட்பட கூட்டமைப்பு நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

