/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிக்கை மனு
/
கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிக்கை மனு
ADDED : செப் 23, 2025 11:40 PM
கமுதி; கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கமுதி தாலுகா நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் சர்வே எண் 69 இல் 71 ஏர்ஸ் புஞ்சை நிலத்தில் பொதுமக்கள் பாதை, சுடுகாடு மீதமுள்ள அரசு புஞ்சை நிலத்தில் கிராமமக்கள் குலதெய்வமாக வழிபடும் கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில், கருப்புசாமி கோயில் மணிகள் உள்பட குடிநீர் தொட்டி, மரங்கள் மற்றும் கோயிலுக்கு மின் இணைப்பு பெற்று உள்ளனர்.
கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ல் அன்னதானம் முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் கோயிலில் சம்பந்தமில்லாத சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பிரச்னை செய்து வருகின்றனர்.
இதையடுத்து நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் சுற்றி அளவீடு செய்து வருவாய்துறையினர் ஆவணம் செய்து கிராம கணக்கிலும் உட்பிரிவு செய்து மின் இணைப்பு வழங்கிய பெயரான கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் என பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதற்கான கோரிக்கை மனுவை கமுதி தாலுகா அலுவலகத்தில் நெறிஞ்சிப்பட்டி கிராம தலைவர் முனியசாமி தலைமையில் ஹிந்து ராஷ்ட்ரா சபா மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் பிரகாசம், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சேர்மன், பா.ஜ., ஒன்றிய தலைவர் முருகன், தேவர் தேசிய பேரவை மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, ஹிந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ஜோதி முத்துராமலிங்கம் உட்பட நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் பங்கேற்றனர்.