/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைக்கு கட்டடம் வேண்டி எம்.பி.,யிடம் மனு
/
ரேஷன் கடைக்கு கட்டடம் வேண்டி எம்.பி.,யிடம் மனு
ADDED : ஏப் 29, 2025 11:52 PM
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் வேண்டி எம்.பி., தர்மரிடம் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக 5 கி.மீ., உள்ள முதுகுளத்துார் சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். இதுகுறித்துதினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து காத்தாகுளம் கிராமத்தில் சமுதாய கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்திற்கு ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் வேண்டி கோரிக்கை மனுவை எம்.பி., தர்மரிடம் ராமநாதபுரம் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர்.
உடன் கவுன்சிலர் குமார், வக்கீல் சண்முகநாதன், ஒன்றிய பொதுச்செயலாளர் சேதுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் உட்பட பலர் இருந்தனர்.

