/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டுங்கள் ரயில்வே அமைச்சருக்கு மனு

ADDED : செப் 21, 2024 05:13 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்டக் கோரி ரயில்வே அமைச்சருக்கு சமூக ஆர்வலர் சிக்கந்தர் மனு அனுப்பினார்.
பாம்பன் கடலில் 1914ல் அமைத்த பாலத்தில்ரயில் போக்குவரத்து துவங்கியது. 100 ஆண்டுகளை கடந்த இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் புதிய பாலம் கட்ட 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
2006ல் மதுரை முதல் ராமேஸ்வரம் வரை அகல ரயில் பாதை அமைத்த போது பாம்பன் பாலம் துாண்கள் பழமையானது என்பதால் அகல பாதையை மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வரை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.
ஆனால் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து உடனே ஆய்வு செய்து ராமேஸ்வரம் வரை அகலப் பாதை அமைக்க வலியுறுத்தினார். இதையடுத்து பாலத்தில் அகலப் பாதை அமைக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்கியது.
அப்துல்கலாம் முயற்சியால் ராமேஸ்வரத்திற்கு அகல ரயில் பாதை கிடைத்த நிலையில் அவரது புகழை போற்றும்வகையில் புதிய பாம்பன்பாலத்திற்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்க்கு ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் மனு அனுப்பினார்.