/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தறி கூலியை பணமாக வழங்க கைத்தறித் துறை அமைச்சரிடம் மனு
/
தறி கூலியை பணமாக வழங்க கைத்தறித் துறை அமைச்சரிடம் மனு
தறி கூலியை பணமாக வழங்க கைத்தறித் துறை அமைச்சரிடம் மனு
தறி கூலியை பணமாக வழங்க கைத்தறித் துறை அமைச்சரிடம் மனு
ADDED : ஜன 09, 2025 04:59 AM
பரமக்குடி: நெசவாளர்களின் தறி கூலியை பணமாக மட்டுமே வழங்க வேண்டும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் பரமக்குடி பெடரேஷன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் 82 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள பல ஆயிரம் சங்கங்களில் பல லட்சம் நெசவாளர்கள் தொழில் செய்கின்றனர். இவர்களுக்கான தறி கூலி ரொக்கமாக வழங்கப்பட்ட நிலையில் சில மாதங்களாக காசோலையாக வழங்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.
இதனால் குறைந்தபட்ச கூலியை பெறவும் தொழிலை விடுத்து பல கி.மீ., தொலைவில் உள்ள வங்கிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வழக்கம் போல் கூலியை சங்கங்களில் ரொக்கமாக வழங்க வேண்டும். மழைக் காலங்களில் நெசவாளர்களுக்கு ஏற்படும் தொழில் இழப்பை ஈடு செய்ய உதவித்தொகை வழங்க வேண்டும்.
கோ--ஆப் டெக்ஸ் உற்பத்தி திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். கோ--ஆப்டெக்ஸ் அலுவலர்கள் உரிய நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்ய வேண்டும். இதனை விடுத்து மண்டல அலுவலகங்களுக்கு ஜவுளி பண்டல்களை எடுத்து வரக் கூறுவதால் காலம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.
கைத்தறி துணிகளுக்கான ரிபேட் சீலிங் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி, எமனேஸ்வரம் பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை சந்தித்து மனு அளித்தார்.