/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தபால் தலை சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்
/
தபால் தலை சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 08, 2025 02:55 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தபால் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோட்ட கண்காணிப் பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா வாழ்த்து தெரிவித்தார். தலைமை யாசிரியர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். அஞ்சல்துறை சார்பில் வெளியிடப்படும் தபால் தலைகளின் சிறப்புகள் குறித்தும் தபால் தலை சேகரிப்பு அவசியம், அதன் பயன் பற்றி கண்காணிப் பாளர் விரிவாக பேசினார்.
அஞ்சல்துறை சார்பில் நடந்த தபால் தலை விழிப்புணர்வு போட்டிகளில் உதவித்தொகை வென்ற 7 மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் கருணாநிதி, தலைமை அஞ்சல் அதிகாரி சேக்தாவூத், மக்கள் தொடர்பு அதிகாரி பாலு, இன்சூரன்ஸ் வளர்ச்சி அதிகாரிகள் அகமது, மகேஷ்வரன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.