தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இயற்பியல் தேர்வு எளிது சென்டம் எடுப்பது சிரமம்

 இயற்பியல் தேர்வு எளிது சென்டம் எடுப்பது சிரமம்

 இயற்பியல் தேர்வு எளிது சென்டம் எடுப்பது சிரமம்


ADDED : மார் 14, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்தன. அதே சமயம் இரண்டு, மூன்று மதிப்பெண்கள் பகுதியில் சில வினாக்கள் கடினமாக இருந்ததால் நிறைய பேர் சென்டம் எடுப்பது சிரமம் என ராமநாதபுரம் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதிக மதிப்பெண்கள் பெறலாம் எம்.லக்சனா , ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

ஒரு மதிப்பெண் 15 வினாக்களும் எளிதாக இருந்தன. முழு மதிப்பெண்கள் எடுக்கலாம். 2 மதிப்பெண்கள் பிரிவில் ஒரு வினாவை கடினமாக உள் பகுதியில் இருந்து கேட்டுள்ளனர். மற்றபடி ஏற்கனவே மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் தேர்வு எளிதாக இருந்தது. 3 மதிப்பெண்கள் பிரிவில் கட்டாய வினா கடினமாக கேட்டுள்ளதால் சென்டம் எடுப்பது சிரமம் தான். 95 மதிப்பெண்கள் எதிர்பார்க்கிறேன். சுமராக படிப்பவர்கள் கூட 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்.

புத்தகத்தில் இருந்து வினாக்கள் எப். ஜெசன் பிரான்சிஸ் , இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

70 மதிப்பெண்ணிற்கு தேர்வு என்பதால் சீக்கிரமாக தேர்வை எழுதி முடித்து விடைத்தாளை சரிபார்க்க நேரம் கிடைத்தது. 5 மதிப்பெண்கள் பிரிவில் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஒரு மதிப்பெண்களில் 3 வினாக்களும், 2, 3 மதிப்பெண்கள் பிரிவில் கட்டாய வினாக்கள் உள்பகுதியில் இருந்து கேட்டுள்ளனர். பதிலளிக்க சிரமப்பட்டோம். மற்றபடி புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்டுள்ளனர். 95 மதிப்பெண்களுக்கு மேல் தாராளமாக எடுக்கலாம் .

எதிர்பார்த்ததை விட எளிமை எம். தேவதர்ஷினி , அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டினம்

5 மதிப்பெண் பிரிவில் எதிர்பார்க்காத பார்முலா கேள்வி கடினமாக இருந்தது. 2 மதிப்பெண் பிரிவில் ஒரு முக்கிய வினா மட்டும் கடினமாக இருந்தது. மற்றப்படி புத்தகத்தில் படித்தவற்றில் இருந்து வினாக்கள் வந்திருந்தன. ஒரு மதிப்பெண் வினாவில் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்டுள்ளனர். இயற்பியல் தேர்வு எதிர்பார்த்தை விட எளிமையாக இருந்தது. நிறைய பேர் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். அனைவரும் தேர்ச்சி பெறலாம்.

தேர்வு அச்சம் நீங்கியது ஏ.ஜி.அக்சித் ஆறுமுகம் , காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்துார்

இயற்பியல் பாடம் கடினமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் புத்தகத்தில் படித்திருந்த வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் தோல்வி பயம் நீங்கியது. 2, 5 மதிப்பெண்கள் பிரிவில் எளிமையான வினாக்கள் கேட்டிருந்தனர். 3 மதிப்பெண் கேள்வி கட்டாய வினா புரியவில்லை. சில வினாக்கள் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டடிருந்தது. சென்டம் எடுப்பது கடினம் தான். செய்முறை தேர்வு மதிப்பெண் 30 உள்ளதால் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை.

சென்டம் எடுப்பது சிரமம் எம். முரளிதரன் , ஆசிரியர், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிமையாக கேட்டுள்ளனர். ஒரு மதிப்பெண் பிரிவில் 15 வினாக்களில் நன்றாக படிப்பவர்கள் முழு மதிப்பெண்கள் பெறலாம். 5 மதிப்பெண் கேள்விகளும் புத்தகத்தில் இருந்து கேட்டுள்ளதால் அப்படியே மதிப்பெண் எடுக்க லாம். 2 மதிப்பெண் பிரிவில் புத்தகத்தில் இல்லாமல் பயிற்சி வினாவில் உள்ள 2.5 மைக்ரோ மீட்டர் என உள்ளதை சற்று மாற்றி 5 மைக்ரோவிற்கு கணக்கிடும் கேள்வி இடம்பெற்றுள்ளது.

இவ்வினாவை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டுள்ளனர். சிலர் மட்டுமே சரியாக எழுதியுள்ளனர். அவர்கள் சென்டம் எடுக்கலாம். 3 மதிப்பெண் பிரிவிலும் கட்டாய வினாவும் புத்தகத்திற்கு உள்ளிருந்து பார்முலா அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளதால் பலர் எழுத சிரமப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இயற்பியலில் நிறைய பேர் சென்டம் எடுப்பதும் சிரமம். செய்முறை தேர்வு மதிப்பெண்கள் 30 உடன் 85 முதல் 95 வரை நிறைய மாணவர்கள் எடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us