/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 16, 2025 11:51 PM

பட்டணம்காத்தான்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பன்றிகள் சுற்றித்திரி வதால் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிக்கப்படு கின்றனர். ரோட்டில் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள பழைய, புதிய கலெக்டர் அலுவலக கீழ்தளம், மேல் தளத்தில் கலெக்டர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், மூன்று மாவட்டங்களுக்குரிய ஆவண ஆய்வுக்குழு அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ--சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறுதுறை அலுவலகங்கள் தனித்தனியாக செயல்படுகிறது.
இவ்விடங்களுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பணியாளர்கள், பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக பன்றிகள் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் உள்ளது. குப்பைத்தொட்டி அருகே பன்றிகள் திரிவதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.