/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் சாலையில் தனியார் கட்டுமான பொருட்கள் குவியல்: மக்கள் அவதி
/
பாம்பன் சாலையில் தனியார் கட்டுமான பொருட்கள் குவியல்: மக்கள் அவதி
பாம்பன் சாலையில் தனியார் கட்டுமான பொருட்கள் குவியல்: மக்கள் அவதி
பாம்பன் சாலையில் தனியார் கட்டுமான பொருட்கள் குவியல்: மக்கள் அவதி
ADDED : நவ 04, 2025 04:01 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் தனியார் சிலர் கட்டுமான பொருள்களை குவித்து விற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாம்பன் ஊராட்சி அக்காள்மடத்தில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் ரோடு உள்ளது. இங்கு பல இடங்களில் உள்ளூர் வியாபாரிகள் சிலர் செங்கல், ஜல்லி, எம்.சாண்ட், கட்டட இடிபாடுகள் உள்ளிட்ட கட்டு மான பொருட்களை குவித்து வைத்து விற் கின்றனர். இதனால் சர்வீஸ் ரோடு கட்டுமான பொருட்களை விற்கும் பகுதியாக மாறி உள்ளது.
மேலும் இந்த சர்வீஸ் ரோட்டோரத்தில் ஞாயிறு தோறும் காய்கறி சந்தை நடக்கும். இதில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் நேரடியாக காய்கறிகளை மலிவான விலையில் விற்கின்றனர்.
இதனை வாங்க ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பனை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிக்கின்றனர்.
ஆனால் சர்வீஸ் ரோட்டில் குவிந்து கிடக்கும் கட்டுமான பொருள்களால் டூவீலர், ஆட்டோக்களை நிறுத்தவோ, பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே சர்வீஸ் ரோட்டில் தனியார் குவித்து உள்ள கட்டுமானப் பொருள்களை அகற்றி சம்பந்தப்பட்ட வியா பாரிகள் மீது நட வடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

