/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
யாத்திரை பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
/
யாத்திரை பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 12:31 AM
ராமநாதபுரம்: ராம சேது யாத்திரை பணியாளர் சங்கத்தினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அளித்த மனு:
ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு ராமேஸ்வரம் தல வரலாறு குறித்து விவரிக்கும் பணியில் 85 பேர் 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். ராமேஸ்வரத்தில் மிதக்கும் கல்லின் விவரத்தையும், கோதண்டராமர் கோயில் வரலாற்றையும் கூறி அன்னதானம் செய்து வருகிறோம்.
பக்தர்கள் விரும்பி தரும் பணத்தை மட்டும் பெறுகிறோம். கூடுதல் பணம் தர வேண்டும் என வற்புறுத்துவதில்லை. தற்போது ராம சேது யாத்திரை பணியாளர் சங்கம் ஆக்கிரமிப்பு செய்து ராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று பக்தர்களிடம் கூறுவதாக கோயில் இணை ஆணையர் சங்கத்திற்கு தடை விதித்துள்ளார். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தனர்.