/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் இருந்து பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
/
கீழக்கரையில் இருந்து பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
கீழக்கரையில் இருந்து பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
கீழக்கரையில் இருந்து பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : ஜன 15, 2024 11:17 PM
கீழக்கரை : -கீழக்கரையில் இருந்து முருக பக்தர்கள் பாத யாத்திரையாக நேற்று பழநி புறப்பட்டுச் சென்றனர்.
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. நேற்று மாலை 5:00 மணிக்கு பழநி பாதயாத்திரை முருக பக்தர் குழுவினர் கோயிலுக்கு வந்தனர். கனவில் வந்த கணேசருக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் தலைமை குருசாமி நாகராஜ், சற்குருநாதர்கள் ரமேஷ், சக்தி முருகன் உட்பட 15 பேர் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடியில் இருந்து பாத யாத்திரையாக 350 கி.மீ., பயணம் செய்து 9 நாட்கள் நடந்து தைப்பூச திருவிழாவில் பங்கேற்பதற்காக செல்கின்றனர். ராமநாதபுரம், காரைக்குடி வழியாக பாதயாத்திரை குழுவினர் பக்தி பாடல்களை பாடியவாறு செல்கின்றனர்.