/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்கா முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் யாத்திரீகர்கள் அவதி போலீசார் நடவடிக்கை தேவை

ADDED : அக் 19, 2024 11:23 PM
கீழக்கரை: ஏர்வாடி தர்கா நுழைவாயில் பகுதியில் மூன்று ரோடு சந்திக்கும் சாலையில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது. வாகனங்களில் வரும் யாத்திரீகர்கள் சிரமப்படுகின்றனர்.
ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் யாத்திரீகர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.
இதன் அருகே போலீசார் புறக்காவல் நிலையம் உள்ள நிலையில் அப்பகுதி வளாகம் முழுவதும் கார்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி வருகிறது.
பிரதான சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவு உள்ளன. இடநெருக்கடியால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் ஏர்வாடி தண்ணீர் பந்தலில் இருந்து தர்கா பின்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டில் சுற்றி மீண்டும் தர்கா அலங்கார வாயில் வழியாக பஸ் செல்வதற்கு பெரும் இடையூறாக உள்ளது.
எனவே ஏர்வாடி போலீசார் மற்றும் கீழக்கரை வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.