/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் பள்ளம்: விபத்து அபாயம்
/
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் பள்ளம்: விபத்து அபாயம்
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் பள்ளம்: விபத்து அபாயம்
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் பள்ளம்: விபத்து அபாயம்
ADDED : ஜூலை 10, 2025 11:39 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் துணை முதல்வர் திறந்து வைத்த பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி மூடி உடைந்ததில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் மக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சியில் 2019ல் ரூ. 52.60 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கியது. ராமேஸ்வரம் கோயில் ரதவீதி, சன்னதி தெரு, கிழக்கு தெரு, மார்க்கெட் தெரு, திட்டக்குடி தெரு உள்ளிட்ட சில தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்ல குழாய், தொட்டி அமைத்தனர்.
இத்திட்டம் முழுமை பெறுவதற்கு முன்பே பல இடங்களில் கழிவுநீர் தொட்டி மூடி உடைந்தும், கழிவு நீரை சுத்திகரிக்கும் மையம் கட்டுமானப் பணி முழுமை பெறாமல் முடங்கி கிடந்தது. மொத்தத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணி தரமின்றி முழுமை பெறாமல் இருந்த நிலையில் ஜூன் 11ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
இதன்பின் சன்னதி தெருவில் உள்ள தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடி அக்னி தீர்த்த கடலில் கலந்தது. இதனை தொடர்ந்து நேற்று கோயில் மேற்கு கோபுர வாசல் முன்பு கழிவுநீர் தொட்டி மூடி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனுள் டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள், ஆட்டோக்கள் சிக்கி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இத்திட்டம் துவங்கிய 30 நாட்களில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியும், ஆங்காங்கே கழிவு நீர் தொட்டி மூடிகள் உடைந்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது.

