/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தை பசுமையாக்க 3 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டம்! விவசாயிகள், மக்களுக்கு வழங்க வனத்துறை ஏற்பாடு

ADDED : ஜூலை 23, 2025 12:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் நடப்பு ஆண்டில் தங்கச்சிமடம், கமுதக்குடி, ஆற்றங்கரை, மாரியூர் ஆகிய இடங்களில் புதிதாக நர்சரி கார்டன் அமைத்து 3 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள், அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவசமாக வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் உயிர்பண்ணை, பசுமையாக்கல் திட்டத்தில் ஆண்டு தோறும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவை வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் நெடுஞ்சாலைகள், கண்மாய்கள், ஊருணி பகுதிகளில் நடப்படுகின்றன. இதன்படி 2011 முதல் 2019 வரை 11 லட்சத்து 53 ஆயிரத்து 203 மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
இவற்றில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 729 மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இவை விவசாயிகளுக்கு வேளாண் துறையுடன் இணைந்து வினியோகம் செய்யப்படுகின்றன. 2020, 2021 ல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் வனத்துறைக்கு மரக்கன்றுகள் வளர்க்க நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் ராமநாதபுரம் வனத்துறை மூலம் மாவட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், கமுதக்குடி, ஆற்றங்கரை, மாரியூர் ஆகிய இடங்களில் நர்சரி கார்டன் அமைக்கும் பணி நடக்கிறது. வேம்பு, புங்கன், புளி, தேக்கு மற்றும் நெல்லி, எலுமிச்சை, மூலிகைசெடிகள் உள்ளிட்ட 50 வகை மரக்கன்றுகள் வளர்க்க உள்ளோம். பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலக வளாகங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றார்.