ADDED : செப் 29, 2026 04:03 AM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மு.துாரி கிராமத்தில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது.
டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார். மு.துாரி கிராமத்தில் நீர்நிலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை டி.எஸ்.பி., சண்முகம் நட்டார்.
மாணவர்கள் அரசு மாணவர் விடுதியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாராயணன் உட்பட கிராம மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.
