ADDED : ஏப் 08, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. புன்னை, மகிழம், பூவரசு, நீர் மருது, புங்கை உள்ளிட்ட 25 மரக்கன்றுகள் அப்பகுதியில் போதிய இடைவெளியில் நடப்பட்டது. சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமை வைத்தார். எஸ்.ஐ., அருள் முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார். தனிப்பிரிவு போலீசார் சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.
--
