ADDED : ஏப் 21, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி பால்கரையில் உள்ள குடிநீர் ஊருணி அருகே 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் வள்ளி ஜோதிடம் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் ஜோதிடர் தனசேகரன் தலைமை வகித்தார். தலைமை ஆலோசகர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்கு உறுதிமொழி எடுத்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
