UPDATED : அக் 17, 2026 04:59 PM
ADDED : அக் 17, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழனி பாபா அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் மையவாடியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஜமாத் தலைவர் ஹாஜா நசுருதீன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன், வன அலுவலர் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தனர். 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னாள் ஜமாத் தலைவர் பசீர் அகமது, அறக்கட்டளை நிர்வாகிகள் புகாரி, இம்ரான், இர்ஷாத் உட்பட ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
