ADDED : ஆக 17, 2026 06:22 PM
ராமநாதபுரம்: -
விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 14 ல், 600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளோம். அதைத் தொடர்ந்து செப்.16, 17 ஆகிய தினங்களில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, திருவாடானை, மண்டபம், சாயல்குடி, கடலாடி, திருப்பாலைக்குடி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், ஏர்வாடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கவுள்ளது. விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த தண்ணீரில் எளிதில் கரையும், வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
