நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழக சட்டசபையின் 2024--26ம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு ராமநாதபுர மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் நடந்து வரும் பணிகளை ஆக.,12ல் ஆய்வு செய்யவுள்ளது.
குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்கரபாணி, சீனிவாசன், தளபதி, நல்லதம்பி, பூமிநாதன், மணி, மாங்குடி, மோகன், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளதாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

