/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி
/
சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி
ADDED : அக் 06, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடியில் உள்ள கைலாசநாதர் சமேத மீனாம்பிகை கோயிலில் உழவாரப்பணி நடந்தது.
இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கோயிலில் தற்பொழுது திருப்பணி வேலைகள் நடக்கிறது. இந்நிலையில் கோயில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் துாய்மை செய்யும் பணி நடந்தது. மதுரை ஆதி சொக்கன் மீனாட்சி திருத்தொண்டர் உழவாரப்பணி குழு தலைவர் மாரிமுத்து குழுவினர் பங்கேற்று உழவாரப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் சமஸ்தான பேஸ்கார் சீனிவாசன் செய்திருந்தார்.