ADDED : ஜூலை 23, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற மலைப்பகுதிகளில் வளரும் பிளம்ஸ் பழங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி வருகின்றனர்.
அவற்றை ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, அரண்மனை பஜார் ஆகிய இடங்களில் விற்பனை செய்கின்றனர். இவை கிலோ ரூ.200க்கு விற்கிறது.
பிளம்ஸ் பழம் சுவையுடன் சத்து மிகுந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.
