ADDED : மே 18, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனி, பிளஸ் 1 தேர்வில் இயற்பியல், உயிரியல், கணிதம் பாடங்களில் 100 மதிப்பெண், தமிழ்,ஆங்கிலம், வேதியியல் பாடங்களில் 99 மதிப்பெண் 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தார்.
மாணவியை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர். காவிய ஜனனி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார்.