sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர் இறப்பு

உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர் இறப்பு

உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர் இறப்பு


ADDED : அக் 09, 2025 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 09:25 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து இறந்தார்.

ஏர்வாடியைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம். இவரது மகன் முகமது பாகிம் 17. இவர் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஏர்வாடியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்தில் உடல் வியர்க்க துவங்கியது. கீழே அமர்ந்து முகத்தை துடைத்தவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக புகார் அளிக்காத பட்சத்திலும் ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us