/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
/
அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூலை 17, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் எஸ்.என்.வி., அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அருள்ராஜன் உள்ளார்.
இவர் சில மாதங்களாக வகுப்புகளில் பாடம் எடுக்கும் நேரங்களில் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான தகவல்களை தெரிவித்து அவர்களுக்கு மனதளவில் தொல்லை செய்துள்ளார்.
இது குறித்து 8, 9, 10ம் வகுப்பு மாணவிகள் தலைமையாசிரியர் தர்மராஜிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் பெற்றோர் மூலம் தலைமையாசிரியர் போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஆசிரியர் அருள்ராஜன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராதா, போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளார்.