ADDED : மார் 18, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் 22, என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருக்கமாக பழகியதை வாலிபர் போட்டோ எடுத்தார். இச்சம்பவம் 2022 ல் நடந்தது. அதன் பின் படத்தை காட்டி வாலிபர் அந்த பெண்ணை பல்வேறு வகைகளில் மிரட்ட ஆரம்பித்தார். இது குறித்து இளம்பெண் புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ வழக்குபதிந்து, ஹரிகரனை தேடி வருகின்றனர்.