நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 34 வயது வாலிபருக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது.
இது குறித்து ராமநாதபுரம் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து திருவாடானை மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.