/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை மரங்களுக்கு தீ வைக்கும் விஷமிகள்
/
பனை மரங்களுக்கு தீ வைக்கும் விஷமிகள்
ADDED : செப் 18, 2025 10:56 PM

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே களரி செல்லும் வழியில் அரசுக்கு சொந்த மான பத்திற்கும் மேற்பட்ட பனை மரங்களை தீ வைக்கும் போக்கு தொடர்கிறது.
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையோரங்களில் உள்ள மரங்கள் உள்ளிட்டவைகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிற பெயின்டுகளால் அரசுக்கு சொந்தமானது என அடையாளப்படுத்தி வைத்து உள்ளனர். இதன் மூலம் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப் படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையே இதற்கு காரணம்.
இந்நிலையில் உத்தர கோசமங்கை அருகே களரி செல்லும் சாலையில் பனை மரங்களின் வேர் பகுதிகளில் விஷமிகள் தீ வைத்து எரித்துள்ளதால் பனை மரத்தின் ஓலைகள் பட்டு போய் மரம் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
எனவே அரசுக்கு சொந்தமான பனை மரம் உள்ளிட்ட இதர மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அவசிய தேவையாக உள்ளது என இயற்கை ஆர் வலர்கள் தெரிவித்தனர்.