/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் சிட்டாய் பறக்கிறார்கள் போலீசாரின் நடவடிக்கை தேவை
/
டூவீலரில் சிட்டாய் பறக்கிறார்கள் போலீசாரின் நடவடிக்கை தேவை
டூவீலரில் சிட்டாய் பறக்கிறார்கள் போலீசாரின் நடவடிக்கை தேவை
டூவீலரில் சிட்டாய் பறக்கிறார்கள் போலீசாரின் நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 03, 2025 05:14 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளான திருப்பாலைக்குடி, ஆனந்துார், உப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் அதிகளவில் டூவீலர்களை பயன்படுத்துகின்றனர். விபத்திற்கு முன்பாக போலீசார் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால், மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனங்களை பறிமுதல் செய்யப்படுவதோடு பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையிலும் சிறுவர்கள் அதிகளவில் டூவீலர் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
எனவே போலீசார் லைசன்ஸ் இன்றி டூ வீலர் ஓட்டும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.