/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் கொள்ளை சம்பவம் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
/
ஆர்.எஸ்.மங்கலம் கொள்ளை சம்பவம் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
ஆர்.எஸ்.மங்கலம் கொள்ளை சம்பவம் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
ஆர்.எஸ்.மங்கலம் கொள்ளை சம்பவம் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
ADDED : டிச 14, 2025 06:25 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய 5 தனிப்படைகள் அமைத்தும் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைக்காததால் போலீசார் திணறுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின் ரோடு அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அர்ச்சுனன் 60. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது வீட்டில் டிச.,6ல் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 160 பவுன் நகைகள் ரூ.18 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க எஸ்.பி. சந்தீஷ் உத்தரவின் பேரில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டது.
இவர்கள் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தல், தொழிலதிபருடன் தொழில் நிமித்தமாக தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகிய நிலையில் போலீசார் பல்வேறு வழிகளில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையிலும் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கொள்ளையர்கள் சிக்காததால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் உட்பட சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

