/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மது போதை சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிப்பு
/
மது போதை சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிப்பு
மது போதை சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிப்பு
மது போதை சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிப்பு
ADDED : டிச 01, 2024 07:19 AM
திருவாடானை : அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சான்றிதழ் வாங்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மது போதையால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
எனவே மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க போலீசார் வாகன சோதனைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு வாகன ஓட்டிகளை கைது செய்யும் போது டாக்டர் வழங்கும் சான்றை வைத்தே இந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது.
திருவாடானை அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் மதியம் 12:30 மணியோடு சென்று விடுவதால் மது போதை சான்றிதழ் வாங்க முடிவதில்லை. பொதுவாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மது அருந்தி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
அந்த நேரத்தில் வாகன ஓட்டிகளை போலீசார் சோதனை செய்யும் போது திருவாடானையில் டாக்டர் இல்லாததால் மது போதை சான்றிதழ் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.