/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை மூவரை பிடித்து போலீசார் விசாரணை
/
ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை மூவரை பிடித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை மூவரை பிடித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை மூவரை பிடித்து போலீசார் விசாரணை
ADDED : மே 20, 2025 12:45 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளைஞரை அடித்துக்கொலை செய்து கடற்கரைப் பகுதியில் வீசிய வழக்கில்,மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த கமால்முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 31. இவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து உடலை திணைக்குளம்நாடார் குடியிருப்பு கடற்கரையில் வீசி சென்றுள்ளனர். இவரது உடலை மே17ல் இரவு திருப்புல்லாணி போலீசார் கைப்பற்றினர். உடல் முழுவதும் காயம் இருந்ததால் சந்தேக மரணம், என வழக்குப்பதிவு செய்தனர்.பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நேற்றுராமநாதபுரம் சின்னகடை முகமது அனாஸ் 32,வெற்றிலைக்காரத்தெரு முகமது சாரூக்கான் 26, வடக்குத்தெரு சிவபிரசாத் 27ஆகியோரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.